×

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு ஆர்.எம்.ஜெயின் வித்யாஷ்ரம் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

திருவள்ளூர்,மே 8: திருவள்ளூர், ஆர்.எம்.ஜெயின் வித்யாஷ்ரம் பள்ளியில் மார்ச்  மாதம் நடைபெற்ற சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 157 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.  100 சதவீதம் ஆகும்.  மாணவி டி. சக்தி ஸ்ரேயா 500க்கு 486 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், எஸ். ஹமீதா 482 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், பி.டி. ஸ்டான்லி ஜோன்ஸ் 478 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.

பாட வாரியாக ஆங்கிலம் 98, தமிழ் 99, இந்தி 97, சமஸ்கிருதம் 98, கணிதம் 99, அறிவியல் 98, சமூக அறிவியல் 100 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த தேர்வில் 31 மாணவர்கள் 450 மதிப்பெண்களுக்கு மேலும், 77 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேலும், 112 மாணவர்கள் 350 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்று தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு பள்ளித் தாளாளர் என்.சி.தரன், பள்ளி முதன்மை முதல்வர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராதாதரன், முதல்வர் ஜெய நாராயணன், துணை முதல்வர் இந்துமதி ஆகியோர் வாழ்த்துக் கூறினர்.

Tags : CBSE 10th Class Examination: RM Jain Vidhyasram School ,
× RELATED சென்னையில் அனைத்து பேருந்து...